ஏப்ரலில் ரோபோ பட வேலைகள் ஆரம்பமாகும் என அறிவித்திருக்கிறார் ரஜினி. ரோபோவில் இடம்பெறும் கிராஃபிக்ஸ் வேலைகளை ரஜினியின் இளைய மகள் செளந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோ கவனிக்கிறது!
'சந்திரமுகி', 'அ ஆ' மற்றும் 'சிவாஜி' படங்களில் பணிபுரிந்துள்ள செளந்தர்யா அட்லாப்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 40 கோடி ரூபாய் செலவில் 'சுல்தான் தி வாரியர்' படத்தை எடுத்து வருகிறார். அனிமேஷன் படமான இது விரைவில் வெளிவர இருக்கிறது.
'ரோபோ'வில் கிராஃபிக்ஸ் அதிகம் பயன்படுத்தப்பட உள்ளது. இதனை ஆக்கர் ஸ்டுடியோவுடன் இணைந்து வெளிநாட்டு நிறுவனங்கள் செய்ய உள்ளன. எந்தெந்த நிறுவனங்கள் என்பது படப்பிடிப்புக்கு முன் முடிவு செய்யப்படும் என ஷங்கர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.