இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிப்பதற்குதான் சந்தியாவிற்கு வாய்ப்புகள் வருகின்றன. 'தூண்டில்' படத்தில் இன்னும் ஒரு படி மேலே போய் ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க வைத்துள்ளார்கள்.
'பிரியசகி' படத்துக்குப் பின் ஷாம், சந்தியா, திவ்யா ஆகியோரை வைத்து கே.எஸ். அதியமான் 'தூண்டில்' படத்தை இயக்கி வருகிறார். முழுக்க லண்டனில் நடைபெறும் கதையிது.
இதில் கர்ப்பிணி பெண்ணாகவும், ஒரு குழந்தைக்கு தாயாகவும் நீண்டதொரு எபிசோடில் நடித்துள்ளார் சந்தியா. இவருக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவராக நீண்ட நாளைக்குப் பின் திரையில் தோன்றுகிறார் நடிகை ரேவதி.
'தூண்டிலின்' பாடல்கள் வெளியிடப்பட்ட நிலையில், அனைத்து ஏரியாக்களும் விற்பனையானால் ரிலீஸ் தேதியை அறிவிக்கலாம் என காத்திருக்கிறார்கள்.