சிரஞ்சீவியின் மகனும், 'சிறுத்தா' படத்தின் நாயகனுமான ராம் சரண் தேஜா ரகசியத் திருமணம் செய்து கொண்டதாக எழுந்த செய்தி ஆந்திர சினிமா உலகைப் பரபரப்படைய வைத்தது.
ராம் சரண் தேஜா சமீபத்தில் 'சிறுத்தா' படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்தில் அவருடன் நடித்தவர் நேகா சர்மா. படம் ஷூட்டிங்கில் இருக்கும்போதே இருவருக்குள்ளும் காதல் என்று கிசு கிசு எழுந்தது.
இந்நிலையில், ராம் சரண் தேஜா நேகா சர்மாவை ரகசியத் திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி காட்டுத் தீ போல ஆந்திராவெங்கும் பரவியது.
சில மாதங்களுக்கு முன்புதான் சிரஞ்சீவியின் இளைய மகள் வீட்டைப் பகைத்துத் தனது காதலனைக் கைப் பிடித்தார். இந்தப் பிரச்சனை ஒருவாறு அடங்கியிருந்த நிலையில் நடிகர் ராஜசேகரின் காரைத் தாக்கி சிரஞ்சீவிக்குத் தலைவலி கொடுத்தனர் அவரின் ரசிகர்கள்.
தனது ரசிகர்களுக்காக சிரஞ்சீவி பகிரங்க மன்னிப்புக் கேட்டு முழுதாக மூன்று நாள் ஆகும் முன், ராம் சரண் தேஜா ரகசியத் திருமணம் செய்து கொண்டார் என்று புரளி.
நொந்து போன ராம் சரண் தேஜா, திருமணத்தை பகிரங்கமாக அறிவித்து விட்டே செய்து கூறிய பிறகே புரளியின் தாக்கம் சற்றுத் தணிந்தது.
வதந்திகளுக்கு எப்படி வாய்ப்பூட்டு போடுவது என்று திகைத்துப் போயிருக்கிறார் சிரஞ்சீவி.