Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாலுமகேந்திராவின் 'கோடை விடுமுறை'யில் மாளவிகா!

Advertiesment
பாலுமகேந்திராவின் 'கோடை விடுமுறை'யில் மாளவிகா!
, சனி, 2 பிப்ரவரி 2008 (19:40 IST)
'அது ஒரு கனாக்காலம்' படத்திற்குப் பிறகு நீண்ட விடுமுறை எடுத்துக்கொண்ட பாலுமகேந்திரா, மீண்டும் படம் இயக்குகிறார். படத்தின் பெயர் 'கோடை விடுமுறை'.

பாலுமகேந்திராவின் பூர்வீகம் இலங்கை. "அங்கு நடக்கும் போராட்டத்தை, அம்மக்களின் வாழ்வை, எனது வாழ்நாளுக்குள் படமாக்க வேண்டும்" என்று ஒருமுறை கூறினார் பாலுமகேந்திரா.

'கோடை விடுமுறை' அவரது கனவை நனவாக்கும் படமல்ல. இது வேறு கதை. படத்தில் நடிப்பவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எவரும் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை. தேர்வு செய்யப்பட்ட இரண்டே விஷயங்கள், படத்தின் பெயர் மற்றும் மாளவிகா!

'கோடை விடுமுறை'யில் குலு மணாலி 'ஜில்'லில் ஒரு கதாபாத்திரம் வருகிறது. அதில் நடிக்க மாளவிகாவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளது.

கேமரா கவிஞர் கேட்டு இல்லையென்றா சொல்லப் போகிறார் மாளவிகா!

Share this Story:

Follow Webdunia tamil