Publish Date: Sat, 02 Feb 2008 (19:38 IST)
Updated Date: Sat, 02 Feb 2008 (19:37 IST)
ராதிகாவின் ராடன் நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் சரத்குமார் நடிக்கிறார். ஒரு படத்தை கவுதம் வாசுதேவ மேனனும், இன்னொரு படத்தை கே.எஸ். ரவிக்குமாரும் இயக்குகிறார்கள்.
கவுதம் வாசுதேவ மேனன், சரத்குமாரை இயக்குவது பேச்சளவில் மட்டுமே உள்ளது. இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
ஏப்ரல் மாதம் 'தசாவதாரம்' வெளியான பிறகு ராடன் நிறுவனம் தயாரிக்கும் படத்தை சரத்குமாரை வைத்து இயக்குகிறார் கே.எஸ். ரவிக்குமார். இதற்கான கதை விவாதம் ஏற்கனவே தொடங்கிவிட்டது.
தற்போது சரத்குமார் நடித்து வரும் '1997' படம் அதன் இறுதிகட்டத்தில் இருக்கிறது. சரத்தின் அடுத்தப்படாக கே.எஸ். ரவிக்குமார் இயக்கும் படம் இருக்கும்.