Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சினிமாவில் ரங்கநாதன் தெரு!

Advertiesment
சினிமாவில் ரங்கநாதன் தெரு!
, வெள்ளி, 1 பிப்ரவரி 2008 (19:01 IST)
இளம் இயக்குநர்கள் கதைக்கு கொடுக்கும் அதே அளவு முக்கியத்துவத்தை கதைக் களங்களுக்கும் கொடுக்கிறார்கள்.

'வெயில்', 'பருத்திவீரன்', 'பொல்லாதவன்' படங்களில் கதை நடக்கும் பின்புலம் அழுத்தமாகவும், யதார்த்தமாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கும். இந்தப் படங்களில் வெற்றிக்கு இந்தச் சித்தரிப்புகளுக்கு கணிசமான பங்குண்டு.

'வெயில்' படத்தை அடுத்து வசந்தபாலன் இயக்கும் படத்திற்கு 'அங்காடித் தெரு' என பெயர் வைத்துள்ளனர். வணிகம் அதிகளவில் நடக்கும் தெருவை அங்காடித் தெரு என அழைப்பர்.

இந்தப் படத்திற்காக சென்னையின் பரபரப்பான ரங்கநாதன் தெருவை அப்படியே பெயர்த்து எடுத்ததுபோல் அரங்கு அமைந்துள்ளனர். பெரும்பகுதி படப்பிடிப்பு இங்குதான் நடைபெற உள்ளதாம்.

'கற்றது தமிழ்' அஞ்சலி நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் மோகன் என்ற புதுமுகம் நாயகனாக அறிமுகமாகிறார். திண்டுக்கலைச் சேர்ந்த இவர் ஒரு கால்பந்து வீரராம்!

Share this Story:

Follow Webdunia tamil