ஐங்கரன் பிலிம்ஸ் தயாரிப்பில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிக்க..ராஜுசுந்தரம் இயக்கும் படத்தை ஹாங்காக்கில் படமாக்கப்போகிறார்கள் என்று ஏற்கனவே சொல்லியிருந்தோம்.
ஹீரோயின் யாரென்பது முடிவாகாத நிலையில் அஜித் தொடர்பான காட்சிகளை எடுக்க மொத்த டீமும் கடந்த பதினைந்தாம் தேதி ஹாங்காக்கு போனது.அஜித் பதினெட்டாம் தேதி போனார்.
முப்பது நாள் என்று ப்ளான் பண்ணி போயிருக்கிறார்கள்.ஆனால் போய் ஒரு வார படப்பிடிப்போடு மொத்தப்பேரும் சென்னைக்கு திரும்பிவிட்டார்கள்.
காரணம்...அஜித்துக்கு நாள் முழுக்க தன்னோட குழந்தையின் ஞாபகம் இருந்து கொண்டே இருக்க... மகளை பார்க்க வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பை சென்னைக்கு மாற்ற சொல்லிவிட்டாராம்.
வருகிற பிப்ரவரி 6ம் தேதி முதல் சென்னையில் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.
பாசக்கார ஆளா இருக்கீங்களே தல!