பருத்திவீரன் படத்துக்கு முன்பு அமீர் இயக்கத்தில் வெளிவந்த ராம் படம்..சைப்ரஸ் பட விழாவில் கலந்துகொண்டு சிறந்த நடிகருக்கான விருதை வாங்கிவந்தது.
இப்போது பருத்திவீரன் படமும் ஃப்ரான்ஸ் நாட்டில் நடக்கும் உலக பட விழாவில் கலந்து கொள்ளப்போகிறது. படம் திரையிடுகிற அன்று விழாவில் இருக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர் அமீர் வருகிற பிப்ரவரி முதல் வாரத்தில் ஃப்ரான்ஸ் போகிறார்.
அதற்குள் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் யோகி படத்தின் பெரும்பாலான பகுதிகளை முடிக்க வேண்டும் என்பதற்காக ராத்திரி பகலாக சென்னையில் படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
பருத்திவீரன்...விருது வாங்க வாழ்த்துகள் சார்!