Publish Date: Wed, 30 Jan 2008 (10:36 IST)
Updated Date: Wed, 30 Jan 2008 (10:36 IST)
கார்பரேட் நிறுவனங்கள் கோடம்பாக்கத்துக்கு வந்து தமிழில் படங்கள் எடுக்கப்போவதாக தகவல் வரும்போதே முதலில் இங்கே வந்தது ரிலையன்ஸ் நிறுவனம்தான்.
ஆனால் சொல்லிக்கொள்ளும்படியாக படத் தயாரிப்புகள் எதுவும் அமையவில்லை.அதன்பிறகு வந்த ஐங்கரன்,மோஸர்பியர்,சாய்மீரா நிறுவனங்கள் அதிரடியாக களத்தில் இறங்கிவிட்டது.
இப்போது சுதாரித்துக்கொண்டு ரிலையன்ஸூம் பெரிய படங்கள்,சின்னப்படங்கள் என்று பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
தவிர..படத்தயாரிப்புக்கு பிக் மோசன் பிக்சர்ஸ் என்று பெயர் சூட்டி...முதல் கட்டமாக இரண்டு படங்களுக்கு ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள்.
ஒன்றை இயக்குனர் சேரன் நடித்து இயக்கப்போகிறார்.இன்னொன்றை குறும்படங்கள் இயக்கி கவனத்தை ஈர்த்த லீனா மணிமேகலை இயக்கவிருக்கிறார்.