Publish Date: Tue, 29 Jan 2008 (11:07 IST)
Updated Date: Tue, 29 Jan 2008 (11:07 IST)
சாமி இயக்கத்தில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு பரிவுகாட்ட வேண்டும் என்று சமூக சிந்தனையோடு மிருகம் படத்தை தயாரித்தவர் கார்த்திக் ஜெய் மூவீஸ் கார்த்திகேயன்.
இந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்பை பார்த்துவிட்டு.. இதேபோல் சமூக பிரச்சினை உள்ள கதையை தேடிக்கொண்டிருந்தாராம்.
மிருகம் படத்தில் காமெடி காட்சிகளுக்கு உதவியாக இருந்த வேல்முருகன் அரவாணிகள் தொடர்பாக ஒரு கதை சொல்லியிருக்கிறார். கதை பிடித்துப்போக ஓக்கே சொல்லிவிட்டார்.
குறைந்த முதலீட்டில் இந்தப் படத்தை தயாரிக்க திட்டமிட்டு அதற்கான தொடக்க விழாவை தனது சொந்த ஊரான திருப்பூரில் சிம்ப்பிளாக நடத்தி முடித்துவிட்டார்.
வேல்முருகன் ஏற்கனவே ரஞ்சித்தை வைத்து நேசம்புதுசு படத்தை இயக்கியவர். அவர் இயக்கும் இரண்டாவது படம் இது.