எய்ட்ஸ் பாதிப்பை மையமாக வைத்து சாமி இயக்கிய படம் மிருகம். புதிய ஹீரோ என்றாலும் படம் வெளியாகி பெரிய அளவில் வியாபாரமும் பேரும் கிடைத்திருப்பதில் உற்சாகமாக இருக்கிறார் சாமி.
படப்பிடிப்பு நடக்கும்போதே விருதை குறிவைத்து நிறைய காட்சிகளை எடுத்திருந்தாராம். அது எதுவுமே இங்கே வெளியான தியேட்டர்களில் காண்பிக்கப்படவில்லை.
இப்போது இங்கு வெளியான படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கிவிட்டு விருதுக்காக எடுத்த காட்சிகளை சேர்த்து ஒரு படத்தை ரெடி பண்ணிவைத்திருக்கிறார்.
அதை உலக பட விழாவுக்காக அணுப்பவிருக்கிறாராம். விருது கிடைத்த பிறகு இங்கே மறுபடியும் அதை ரிலீஸ் பண்ணுகிற திட்டமும் இருக்கிறதாம்!