தரணி இயக்குகிற படம் என்றால் பிரம்மாண்டத்துக்கு எப்போதுமே பஞ்சமிருக்காது. கடைசியாக தமிழில் அவர் இயக்கிய கில்லி படத்துக்கு மகாபலிபுரம் அருகே பல கோடி செலவில் ஒரு ஊரையே செட்டாக போட்டு படம் எடுத்தார்.
அதன் பிறகு தெலுங்குக்கு போனவர் மீண்டும் விஜய்யோடு இணைந்து இயக்கும் படம் குருவி. தி.மு.க.வின் தளபதி ஸ்டாலின் வாரிசு உதயநிதி படத்தை தயாரிக்கிறார்.
பிரம்மாண்டத்துக்கு சொல்லவா வேண்டும்! சென்னை கோட்டூர்புரம் அருகில் பறக்கும் ரயில் ஸ்டேஷன் அருகில் பிரம்மாண்டமாக செட் போட்டு படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த செட்டில் மட்டுமே கிட்டத்தட்ட ஐம்பது நாள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறாராம் தரணி!