மலையாள நடிகர் சீனிவாசனும் பார்வதியும் நடித்து ஒரு காலத்தில் கேரளாவில் பரபரப்பாக ஓடிய படம் வடக்குநோக்கி யந்திரம்.
இதன் உரிமையை காமெடி நடிகர் கருணாஸ் வாங்கி வைத்திருக்கிறார். தமிழில் அதை ரீமேக் செய்து நடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.
தயாரிப்பாளர் யாரும் கிடைக்காததால் தள்ளிப் போய்க்கொண்டிருந்தது. இப்போது அந்தக் கதையை மிருகம் படத்தை தயாரித்த கார்த்திக்ஜெய் மூவிஸ் தயாரிக்க விருக்கிறது.
விஜய்காந்த்தை வைத்து சுதேசி படத்தை இயக்கிய ஜே.பி இயக்க விருக்கிறார். பார்வதி கேரக்டரில் நடிக்க கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.