பொங்கலுக்கு ரிலீஸான காளை மிகவும் எதிர்பார்ப்பில் இருந்தது. ஒன்று கதாநாயகன் சிம்பு. இன்னொன்று படத்தின் இயக்குனர் தருண்கோபி ஏற்கனவே இயக்கிய திமீர் படம் வெற்றி பெற்றிருந்தது.
அதனால் இந்த இருவரும் இணைந்து எடுத்திருக்கும் படம் வெற்றியடையும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் மிகவும் மோசம் என்று ரசிகர்கள் தியேட்டரில் கத்துகிறார்களாம்.
ரசிகர்கள் தன் மகன் படத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று அறிய தியேட்டர் ரவுண்ட்ஸ் போன டி.ராஜேந்தர் ரசிகர்கள் கத்துவதை பார்த்து டென்ஷனாகி விட்டாராம்.
அந்த சமயம் பார்த்து படத்தின் இயக்குனர் தருண்கோபி தியேட்டருக்கு வர அவரை கிட்டத்தட்ட அடிக்கப்போய்விட்டாராம் டி. ஆர்.
நல்ல படம் எடுப்பேன்னு பார்த்தால் என் மகன் இமேஜை கெடுத்திட்டியே என்று பயங்கரமாக கோபப்பட்டாராம்