Publish Date: Mon, 21 Jan 2008 (12:55 IST)
Updated Date: Mon, 21 Jan 2008 (12:52 IST)
அகத்தியன் தன்னுடைய படங்களில் க்ளைமாக்ஸ் காட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து எப்போதும் விறுவிறுப்பைக் கொடுப்பார்.
இப்போது அவர் இயக்கி வரும் நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் கடைசி 20 நிமிடம் பரபரப்பாக வருகிறதாம். அந்த அளவிற்கு திரைக்கதையில் வேகம் கொடுத்திருக்கிறாராம்.
இதுவரை எந்தப்படத்திலும் இடம்பெறாத அளவிற்கு க்ளைமாக்ஸ் வித்தியாசமாக இருக்கும் என்கிறார். அதோடு க்ளைமாக்ஸ் காட்சியின் தொடக்கமாக ஒரு பாடல் இடம்பெறுகிறதாம்.
அம்முவாகிய நான் படத்தில் கதாநாயகியாக நடித்த பாரதி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.