ஷங்கரோட ரோபோ படத்தில் ரஜினி நடிக்க ஒப்பந்தமானதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? ரஜினியோட இளையமகள் சௌதர்யாவாம்.
இவர் ஆங்கர் என்னும் கம்பியூட்டர் கிராஃபிக்ஸ் நிறுவனத்தை நடத்துகிறார் என்பது தெரிந்த விசயம். ஷங்கர் ஷாருக்கானை வைத்து ரோபோவை இயக்கும் திட்டத்தில் இருந்தபோது படத்தின் கிராஃபிக்ஸ் வேலைகளுக்காக 40 கோடி ரூபாய் வரை சௌதர்யாவின் ஆங்கர் ஸ்டூடியோவில் கான்ட்ராக்ட் போட்டிருந்தாராம்.
அந்த புராஜெக்ட் இல்லை என்று ஆனதும் அந்த கான்ட்ராக்ட்டுக்காகவே அப்பாவை ரோபோவில் நடியுங்கள் என்று பெரு முயற்சி செய்து ஒப்புதல் வாங்கினாராம் சௌதர்யா.