நான் கடவுள் படத்திற்கு நிதியுதவி செய்து படத்தை தயாரித்துவரும் சாய்மீரா இயக்குனர் பாலாவிடம் முதலில் சொன்ன பட்ஜெட்டுக்கான பணத்தை கொடுத்துவிட்டதாம்.
ஆனால் இன்னும் 40 நாள் படப்பிடிப்பு மீதமிருக்கிறது. படத்தை அணுஅணுவாக செதுக்குபவர் பாலா. இதனால் படத்தின் பட்ஜெட் கூடுவது தவிர்க்க முடியாததுதான்.
இந்நிலையில் சாய்மீராவிடம் பணத்தை கேட்காமல் தன் சொந்த பணத்தை போட்டு மீதமிருக்கும் படத்தை முடிக்க
திட்டமிட்டிருக்கிறாராம் பாலா.
இன்றிலிருந்து மீண்டும் தேனி பகுதியில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.