ரோபோ, பி.வாசு படம் என்று ஒரு பக்கம் சூப்பர் ஸ்டாரின் அடுத்த பட வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது.
இதற்கிடையே சிவாஜி படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டத்திலும் பங்கேற்று முதலைமச்சரின் கையால் கேடயமும் வாங்கி வந்துள்ளார்.
அதே நேரத்தில் சிவாஜி படம் வாங்கி வெளியிட்ட வகையில் எங்களுக்கு ஏகப்பட்ட நஷ்டம். அதை ஈடு செய்து கொடுக்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் சிலர் ரஜினி வீட்டு கதவை தட்டியிருக்கிறார்கள்.
தயாரிப்பாளரிடம் போகாமல் ரஜினியிடம் ஏன் போகவேண்டும். ஏவி.எம் தரப்பில் போய் கேட்டால் எந்த ரெஸ்பான்ஸும் இல்லை...
அதுபோக ஏவி.எம் என்பதுக்காகவா அந்த விலை கொடுத்து வாங்கினோம். ரஜினி என்பதுக்காகத்தானே என்று லாஜிக் பேசுகிறார்களாம்.
இது என்ன புது தலைவலி என அப்செட்டாகி விட்டார் சூப்பர்ஸ்டார்.