Publish Date: Wed, 16 Jan 2008 (13:30 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:47 IST)
கதபறயும் போல் என்ற பெயரில் மலையாளத்தில் வெளியான படத்தை கவிதாலயா நிறுவனம் தமிழில் ரீ மேக் செய்யவிருக்கிறார்கள்.
அங்கே சீனிவாசன் ஹீரோவாக நடிக்க மோகன்லால் நடிகர் மோகன்லாலாகவே ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். இங்கே பசுபதி ஹீரோவாக நடிக்க மோகன்லால் கேரக்டருக்கு ரஜினியை கேட்டிருக்கிறார்கள்.
ரோபோ படம் சுமார் நூறு கோடி பட்ஜெட்டில் தயாரித்து இருநூறு கோடிவரை வியாபாரம் பேசுகிற திட்டத்தில் இருக்கிறார்கள்.
அப்படியிருக்க..அதற்கு முன்பு வருகிற படம் இது என்பதால்... அதன் வியாபாரம் ரோபோவை பாதித்து விடக்கூடாது என்பதற்காக இந்தப்படத்தை நான் சொல்லுகிற ஆட்களுக்கு மட்டும்தான் வியாபாரம் செய்யவேண்டும் என்ற கண்டிஷனோடு நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் சூப்பர்ஸ்டார்.