கவிஞர் இளவேனில் இயக்கும் படம் உளியின் ஓசை. கலைஞரின் கதை வசனத்தில் உருவாகும் படம் இது. புதுமுக ஹீரோவும் அக்ஷயாவும் நடிக்கும் இந்தப்படம் பாதிதான் முடிந்திருக்கிறது.
படம் எப்படி வந்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள விரும்பிய முதல்வர் கலைஞர் இளவேனிலை கூப்பிட்டு கேட்டிருக்கிறார்.
எடுத்தவரை உள்ள படத்தை பக்காவாக ரெடி பண்ணி கலைஞருக்கு போட்டு காட்டியிருக்கிறார். சில காட்சிகளில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டியவர் நிறைவாக உள்ள காட்சிகளை வெகுவாக பாராட்டியும் இருக்கிறார்.
தவிர..படத்தின் சுவாரஸ்யத்துக்காக சில கதாபாத்திரங்களை புதிதாக சேர்கவும் சொல்லியிருக்கிறாராம்.