Publish Date: Mon, 14 Jan 2008 (11:58 IST)
Updated Date: Mon, 14 Jan 2008 (11:58 IST)
ராமேஸ்வரம் படத்தை தயாரித்த ஐ.டி.ஏ பிலிம்ஸ் எஸ்.என்.ராஜா அடுத்து இரண்டு படங்களை ஒரே நேரத்தில் தயாரிக்கவிருக்கிறார்.
பொல்லாதவன் படத்தை இயக்கிய வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படமும், முருகதாஸின் உதவியாளர் விவேக் இயக்கத்தில் இன்னொரு படமும் தயாரிக்கிறார்.
முதல் படத்தில் அநேகமாக தனுஷ் ஹீரோவாக நடிக்கக்கூடும். விவேக் இயக்கும் படத்துக்கு ஜீவாவிடம் பேசியிருக்கிறார்கள்.
இந்தப்படத்துக்கு ராக்கி என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.