இப்பொதுள்ள இசையமைப்பாளர்களில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர் யார் தெரியுமா!? ஹாரிஸ் ஜெயராஜ்தான்,
ஒரு படத்துக்கு சுமார் ஒன்னரை கோடி ரூபாய் சம்பளமாக வாங்குகிறார். பீமா படத்தின் பாடல்கள் பெரிய அளவில் ஹிட் ஆனதை தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கும் அவரையே இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்திருக்கிறார் லிங்குசாமி.
பீமா இந்த மாதத்துக்குள் ரிலீஸ் ஆகிவிடும். அதை தொடர்ந்து தனது படத்துக்கான இசை கம்போஸிங்குக்காக ஹாரிஸ் ஜெயராஜோடு பாங்காக் போகவிருகிறார் லிங்குசாமி.