முன்னாபாய் எம்.பி.பி.எஸ் படத்தை தமிழில் ரீமேக் செய்ய வேண்டும் என்று பேசப்பட்டபோது கமல் தரப்பில் முதலில் சிபாரிசு செய்யப்பட்ட பெயரே இயக்குனர் சரண்தான்.
அப்படி அன்பு செலுத்தியவர்கள் இப்போது முட்டிக்கொண்டு நிற்கிறார்கள்.
வட்டாரம், முனி என இரண்டு படங்களை எடுத்து ஏகப்பட்ட சிக்கலுக்கு ஆளாகிவிட்டார் சரண். அந்தப்படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன்னால் கமலோடு சேர்ந்து ஒரு படம் பண்ண பேச்சுவார்த்தை நடத்தி கமலுக்கு இரண்டு கோடி ரூபாய் அட்வாண்ஸ் கொடுத்திருக்கிறார்.
படங்கள் இரண்டிலும் ஏற்பட்ட நஷ்டத்தை சரிக்கட்ட அந்த கால்ஷீட்டை அப்படியே ஐங்கரன் பிலிஸ்ஸூக்கு மாற்றியிருக்கிறார். என்னை கேட்காமல் எப்படி மாற்றலாம் என்று கேட்டு கால்ஷீட் கொடுக்க மறுத்திருக்கிறார் கமல்.
பணமும் சொன்னபடி திருப்பி தரவில்லை என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார் சரண்.
இரண்டு தரப்பிடமும் பேசி வட்டியோடு 2 கோடியே 90 லட்சம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறாராம் கமல்!