Publish Date: Fri, 11 Jan 2008 (13:21 IST)
Updated Date: Fri, 11 Jan 2008 (13:21 IST)
குஷ்பு என்று பெயர் வைத்ததுக்கு பதிலாக பேசாமல் சர்ச்சை என்று வைக்கலாம் என்று கமெண்ட் அடிக்கிறார்கள் கோடம்பாக்கத்து ஆட்கள்.
வல்லமை தாராயோ படத்தின் தொடக்கவிழாவில் செருப்பு காலோடு சாமி சிலைமுன் உட்கார்ந்தார் என்ற சர்ச்சை ஓய்வதற்குள் அடுத்த சர்ச்சைக்கு விதைபோட்ட சம்பவம் நேற்று மாலை அரங்கேறியிருக்கிறது.
ஒரு புத்தகவெளியீட்டு விழா சென்னை எழும்பூரில் நடந்தது. விழாவுக்கு விடுதலை சிருத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனையும் குஷ்புவையும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்திருக்கிறார்கள்.
விழாவுக்கு முன்கூட்டியே வந்து உட்கார்ந்திருந்தார் குஷ்பு. அதனை தொடர்ந்து வந்த திருமாவளவனுக்கு குஷ்பு எழுந்து நின்று மரியாதை செய்யவில்லையாம்.
பின்னர் மேடை ஏறும்போது ஒரு வணக்கத்தை போட்டுவிட்டு.. மைக்கில் பேசும்போது ஏற்கனவே அவர் வரும்போது தான் வணக்கம் வைக்காததையும் பின்பு வணக்கம் வைத்ததையும் குறிப்பிட்டு சொல்ல...
அது இப்போது பெரிய சர்சையாகிவிட்டது.