சிங்ககுட்டி படத்தின் படப்பிடிப்புக்கு ஒளிப்பதிவாளர் ராஜ சேகர் வராததால் பல லட்சம் நஷ்டம் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருந்தார் அதன் தயாரிப்பாளர்.
அது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் எனக்கு சத்தியம் படத்துக்கான வேலை இருக்கிறது. அதனால் எனது நண்பர் ராமேஸ்வரன் ஒளிப்பதிவாளராக பாக்கி படத்தை முடித்துக்கொடுப்பார் என்று பிடிச்சிருக்கு படத்தின் காமெராமேனை சிபாரிசு செய்தார் ஒளிப்பதிவாளர் ராஜசேகர்.
அப்படியா...! என்று ஆச்சர்யப்பட்டு முடிப்பதற்குள்..சத்தியம் படத்தில் ராஜசேகருக்கு பதிலாக ப்ரியன் ஒளிப்பதிவு செய்வார் என்று அறிவித்திருக்கிறார்கள்.
என்னப்பா நடக்குது!