மனதோடு மழைக்காலம், புலிவருது, தெனாவெட்டு படங்களை எடுத்திருக்கும் ஈ.எல்.கே புரடக்ஷன் ஆன்டணி தற்போது தயாரித்துக் கொண்டிருக்கும் படம் பயணிகள் கவனிக்கவும்.
விஜயகுமார் என்ற புதுமுகம் இயக்கும் இந்தப் படத்தில் ஜீவன் ஹீரோவாக நடிக்கிறார். படத்துக்கு ஒளிப்பதிவாளராக யூ.கே.செந்தில்குமார் ஒப்பந்தமாகியிருந்தார்.
இரண்டு நாள் படப்பிடிப்பு நடந்த நிலையில் ஹீரோயின் கிடைக்கவில்லை என்று படப்பிடிப்பு நின்று போனது.இப்போது தோட்டாவில் தொடங்கிய நட்பால் ப்ரியாமணியை சிபாரிசு செய்திருக்கிறார் ஜீவன்.
படப்பிடிப்புக்கு கிளம்பளாம் என்று நினைத்தால் ஒளிப்பதிவாளர் யூ.கே.செந்தில்குமார் பாண்டி படத்தில் பிஸி. அதனால் வேறொரு கேமெராமேன் தேடிக்கொண்டிருக்கிறார் இயக்குனர்.