நடிகர் சங்கம் பல்வேறு எதிர்ப்புகளுக்கு பின்பும் மலேசியா, சிங்கப்பூரில் ஸ்டார் நைட் நிகழ்ச்சியை நடத்தி வந்திருக்கிறார்கள்.
இந்நிகழ்ச்சியை மொத்தமாக பெரிய விலைக்கு ஒரு தனியார் நிறுவனத்திற்கு விற்று நிகழ்ச்சிக்கு கிளம்புவதற்கு முன்பே பணத்தை பெற்றுக்கொண்டார்கள்.
பெரிய நடிகர்கள் அதிகமாக பங்கு பெறாததால் டிக்கெட் விற்பனை அவ்வளவாக இல்லையாம். அதனால் நிகழ்ச்சியை எடுத்து நடத்திய நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் நஷ்டம்.
ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டோமே என்று கலங்கிக் கொண்டிருக்கிறார்கள் நஷ்டமான அந்த நிறுவனத்தினர்.