Publish Date: Fri, 04 Jan 2008 (11:35 IST)
Updated Date: Fri, 04 Jan 2008 (11:35 IST)
சித்திரம் பேசுதடி படத்துக்கு பிறகு இரண்டாவது படத்தை இயக்க ஏகப்பட்ட இடைவெளி ஆனாலும் இந்த முறையும் கவனத்துக்குறிய இயக்குனராக வெளிப்பட்டிருக்கிறார் மிஷ்கின்.
நரேன், பிரசன்னா நடிக்கும் அஞ்சாதே படத்தை இயக்கியிருப்பதோடு அந்தப் படத்தில் பாரதியாரின் பாடல் வரிகளுக்கு பாடவும் செய்திருக்கிறார்.
படத்தின் பாடல்கள் வெளியான வேகத்திலேயே மிஷ்கினுக்கு ஏகப்பட்ட பாராட்டுக்களாம்.தொடர்ந்து தங்களது படங்களிலும் பாடவேண்டும் என்று இரண்டு இயக்குனர்கள் அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.
மிஷ்கின் பாடுவது பற்றி இன்னும் முடிவு சொல்லவில்லையாம்.
ஆனால் எல்லாரும் பாராட்டியிருப்பது உற்சாகமாக இருக்கிறது என்கிறார் மிஷ்கின்!