ஆசை அதிகம் வச்சு மனசை அடக்கி வைக்கலாமா என அந்தக் காலத்திலேயே இளசுகளை ஆட்டம் போட வைத்தவர் டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர்.
இதுவரை 700 படங்களுக்கும் அதிகமாக பணியாற்றியிருக்கிறார். இந்திய மொழிகள் அத்தனையிலும் உள்ள அத்தனை சூப்பர் ஸ்டார்களையும் ஆட்டுவித்திருக்கிற பெருமைக்கு சொந்தக்காரர்.
டான்ஸ் தவிர அவ்வப்போது நடிப்பிலும் கவனம் செலுத்தும் சிவசங்கர் மாஸ்டரின் கவலை என்ன தெரியுமா..
நம்மூர் சூப்பர் ஸ்டாரான ரஜினியோடும் கமலஹாசனோடும் இதுவரை ஒரு படம் கூட பணியாற்ற வாய்ப்புக்கிடைக்கவில்லை என்பதுதான்!