Publish Date: Fri, 04 Jan 2008 (11:08 IST)
Updated Date: Fri, 04 Jan 2008 (11:08 IST)
நடிகர் அஜீத்தின் மனைவி நடிகை ஷாலினிக்கு நேற்று அதிகாலை பெண் குழந்தை பிறந்தது.
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகரான அஜீத்தும், நடிகை ஷாலினியும் "அமர்க்களம்' என்ற படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் 2000வது ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் ஷாலினி கர்ப்பம் அடைந்தார். அதன் பிறகு ஷாலினியை, அஜீத்குமார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனைகளை மேற்கொண்டதுடன், அவரை அன்புடன் கவனித்து கொண்டார். நேற்றிரவு ஷாலினிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை நுங்கம்பாக்கம் அப்பல்லோ மருத்துவமனைக்கு அஜீத் அழைத்து வந்தார்.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் ஷாலினுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த போது அஜீத்குமார் அருகிலேயே இருந்தார். பின்னர் மருத்துவமனை ஊழியர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிப்பு வழங்கி தான் தந்தையான மகிழ்ச்சியை கொண்டாடினார்.
சிசேரியன் செய்யப்பட்டதால் ஷாலினி சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தந்தையான அஜீத்துக்கு நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.