அசின் இந்தியில் போய் சல்மான்கானுடன் நடித்து கலக்கி கொண்டிருக்கிறார். ஆனால் இந்தி நடிகை பலருக்கும் தமிழில் நடிக்க விருப்பமானதாக இருக்கிறது.
அதற்காக அவர்கள் கேட்கும் சம்பளம் மட்டும் கொஞ்சம் அதிகபடிதான்.
கௌதம் மேனன், ஷங்கர் போன்றோர் லேட்டஸ்ட் டெக்னாலஜியுடன் தமிழ் படங்கள படு ஸ்டடைலாக எடுப்பதால்தான் அம்மணிகளுக்கு தமிழ் படங்கள் மீது ஈர்ப்பு.
வாரணம் ஆயிரம் படத்தில் இந்தி நடிகை சமீரா ரெட்டியும், தசாவதாரத்தில் மல்லிகா ஷெராவெத்தும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து தீபிகா படுகோன்னும் சீக்கிரம் தமிழ் படம் ஒன்றில் நடிக்கும் திட்டத்தில் இருக்கிறாராம்.