காமெடி நடிகர் செந்தில் ஹீரோவாக நடிக்கும் படம் ஆதிவாசியும் அதிசயபேசியும்.
காட் மஸ்ட் பி கிரேஸியையும் அப்பகிளிப்டோவையும் கலந்து கட்டித்தான் இந்தப் படத்தை எடுக்க விருக்கிறார்கள்.
இதில் செந்திலுக்கு ஜோடியாக முதலில் மீனாவைக் கேட்டிருக்கிறார்கள். எரிந்து விழாத குறையாக திருப்பி அனுப்பியிருக்கிறார்.
மீனாவை இந்தப் படத்தில் நடிக்கவைக்க வேண்டும் என்பதற்காகவே படத்தில் இன்னொரு ஹீரோ கேரக்டரை உருவாக்கி...அவருக்கு ஜோடியாக மீனாவை நடிக்கச்சொல்லி சம்மதிக்க வைத்து விட்டார்கள்.
மீனா ஹீரோயினாக பிஸியாக இருந்த காலத்தில் கொடுத்ததை விட அதிக சம்பளம் கொடுத்திருக்கிறார்கள்.