இயக்குனர் வெற்றிமாறனுக்கு தனுஷ் கொடுத்த பரிசு!
, புதன், 2 ஜனவரி 2008 (11:44 IST)
பொல்லாதவன் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
படம் ஐம்பது நாளை தொட்டுவிட்டது. இப்போது வரை படம் எந்தவித குழப்பமும் இல்லாமல் ஸ்டெடியாக போய்க்கொண்டிருப்பதில் உற்சாகமாக இருக்கிறார் ஹீரோ தணுஷ்.
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பதற்கு உடன் இருக்கும் பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தணுஷ்தான் பிடிவாதமாக இந்தக் கதை ஜெயிக்கும் என்று அழுத்தமாக நம்பியிருக்கிறார்.
அந்த நம்பிக்கை வீண்போகவில்லை என்பதால் பொல்லாதவன் 50வது நாள் அன்று வெற்றிமாறனுக்கு தன் அன்பு பரிசாக ஒரு கார் வாங்கிக்கொடுத்திருக்கிறார் தனுஷ்.