ரித்திஷ்குமார் நடிக்கும் நாயகன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட பெரிய நடிகைகளாக தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக நிறைய நடிகைகளை நடிக்க கேட்டுவிட்டார்கள் ஆனால் ஒருவரும் மசிந்து கொடுக்க வில்லை.
இந்திரலோகத்தில் ந.அழகப்பன் படத்தில் வடிவேலுவுடன் ஸ்ரேயா ஒரு பாடலுக்கு நடனமாடினார். அவரையே தன் படத்திலும் ஒரு பாடலுக்கு கூப்பிடலாமா என்று ரித்திஷ் தரப்பில் யோசித்து வருகிறார்கள்.
வடிவேலுவுடன் நடனமாடியது சினிமாக்காரர்கள் மத்தியில் ஸ்ரேயாவிற்கு இருக்கும் மார்க்கெட்டை கொஞ்சம் குறைத்தது.
அதனால் இப்படியெல்லாம் ஒரு பாடலுக்கு நடனமாடக் கூடாது என்று ஸ்ரேயா முடிவு செய்திருக்கிறார்.
எதற்கும் கேட்டுப்பாருங்கள் ரித்திஷ்.