Publish Date: Sat, 29 Dec 2007 (11:52 IST)
Updated Date: Sat, 29 Dec 2007 (11:52 IST)
ஏற்கனவே நான் கடவுள் படத்தின் யூனிட் பெரியகுளத்திற்கு போய் இதுவரை மூன்று மாதங்களுக்கும் அதிகமாகிவிட்டது.
அதன்பிறகு நடுவில் சின்ன பஞ்சாயத்து நடந்து மீண்டும் படப்பிடிப்புக்கு கிளம்பிப்போனார்கள்.
இந்தமுறை மொத்த படத்தையும் முடித்து விட்டுதான் திரும்பி வருவார் என்று சொன்னார்கள்.
ஆனால் படம் முடிவதற்கு முன்பே படப்பிடிப்பு யூனிட் சென்னை திரும்பிவிட்டது.
காரணம் கிரிஸ்மஸ், நியூ இயர் என்று தொடர்ந்து விழாக்காலமாக இருப்பதால் யூனிட் ஆட்களுக்கு விடுமுறை விட்டிருக்கிறார் இயக்குனர் பாலா.
ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.