Publish Date: Sat, 29 Dec 2007 (11:48 IST)
Updated Date: Sat, 29 Dec 2007 (11:48 IST)
குத்து ரம்யா என்று கோடம்பாக்கத்து ஆட்களால் செல்லமாக அழைக்கப்படும் பொல்லாதவன் ஹீரோயின் ரம்யா இப்போ உற்சாகமாக இருக்கிறார்.
காரணம் இவரை தமிழில் கண்டும் காணாமல் இருந்தவர்கள் பொல்லாதவன் படத்திற்கு பிறகு ஏக்கப்பட்ட இடங்களில் இருந்து அழைப்பு வந்து கொண்டிருக்கிறதாம்.
முன்னனி இளம் ஹீரோக்கள் உடன் மட்டும்தான் நடிப்பேன் என்று தன் கொள்கை முழக்கமாக அறிவித்திருக்கும் ரம்யா.. தற்போது கன்னடம்,தெலுங்கு என படு பிஸியாக இருக்கிறார்.
கால்ஷீட் போதாததால் ஒரு நாளைக்கு மூன்று படப்பிடிப்புக்கு தேதி கொடுத் நடித்துக் கொண்டிருக்கிறார்.
போன் அட்டெர்ன் பண்ணக்கூட நேரமில்லை என்று ரம்யா பெருமையாக சொன்னாலும் ரீ எண்ட்ரீ கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன் போனையும் எடுப்பதில்லை என்பதான் ஆச்சர்யம்!