Publish Date: Sat, 29 Dec 2007 (11:47 IST)
Updated Date: Sat, 29 Dec 2007 (11:46 IST)
மிருகம் படம் வெளியான நாளிலிருந்து பெண்கள் யாரும் தியேட்டர் பக்கம் தலைவைத்துக் கூட படுக்கவில்லை.
போதாக்குறைக்கு தியேட்டர் வாசலில் கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று வேறு போர்டு மாட்டியிருந்தது இன்னும் அதிக கலவரத்தை உண்டு பண்ணிவிட்டது.
இது பெண்களுக்காக எடுக்கப்பட்ட படம் என்று சொன்ன இயக்குனர் சாமி.. கடந்த வாரம் சென்னை உதயம் தியேட்டரில் பெண்களுக்கு இலவச அனுமதி என்று போட்டு பிரத்யேக காட்சிக்கு ஏற்பாடு பண்ணியதில் நல்ல ரெஸ்பாண்ஸாம்.
கிட்டத்தட்ட 400 பேருக்கும் அதிகமாக வந்திருந்து படம் பார்த்துவிட்டு இயக்குனர் சாமியை ஏகத்துக்கும் பாராட்டிவிட்டு போயிருக்கிறார்கள்.