மாதவன் நடித்த 'ஆர்யா' படத்தில் புதுமுகமான அறிமுகமானவர் பிரவீன் குமார். 26 வயதான இவருக்கும் இவரைவிட 10 வயது அதிகமான நடிகை நிஷாவுக்கும் அண்மையில் திருமணம் நடந்தது.
நிஷா ஏற்கெனவே திருமணமாகி கணவரைப் பிரிந்தவர் என்பதாலும், அவருக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளான் என்பதாலும் பிரவீன் குமாரின் பெற்றோர் இத்திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை.
இருந்தாலும் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி நிஷாவைத் திருமணம் செய்துகொண்ட பிரவீன் குமார், பெற்றோர் வீட்டிலேயே தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் பிரவீன் குமாரைத் தன் வீட்டில் வந்து வசிக்குமாறு நிஷா அழைத்துள்ளார். அதை நிராகரித்த பிரவீன் குமார், நிஷாவை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துள்ளார்.
இந்த மோதலின் இறுதியில் மனமுடைந்த பிரவீன் குமார் நேற்று விருகம்பாக்கத்தில் உள்ள தன் வீட்டில் மின்விசிறியில் துக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து பிரவீன் குமாரின் தாயும் சகோதரியும் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் நிஷாவின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.