ஆட்டோ கிராஃப் படத்தில் சேரனுடன் சேர்ந்து பணியாற்றினார் இயக்குனர் சாமி.
அந்தப்படம் முடிந்த கையோடு ட்ரீம் தியேட்டர் பேனரில் பட வாய்ப்பு தருவதாக சொல்லியிருந்தார்.
ஆனால் சேரன் வேறு சில படங்களில் பிஸியாகிவிட்டதால்..வெளியே வந்து உயிர் படத்தை இயக்கினார்.
இப்போது மிருகம் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
நாகர் கோவிலில் படப்பிடிப்பில் இருந்த சேரன் அங்குள்ள தியேட்டரில் படம் பார்த்துவிட்டு சாமியைக் கூப்பிட்டு பாராட்டினாராம்.
விரைவில் இரண்டு பேரு சேர்ந்து படம் பண்ணுகிற திட்டத்தில் இருக்கிறார்கள்.