அஜித், விஜயிடம் கால்ஷீட் வாங்குவது கூட சுலபம். பிரகாஷ்ராஜ் தேதி வாங்குவது அவ்வளவு சாதாரணமில்லை என்று இருக்கிறது.
அத்தனை தயாரிப்பாளர்களும் புலம்பித் தீர்க்கிறார்கள்.
தெலுங்கு, இந்தி, கன்னடம், தமிழ் என்று அனைத்து மொழிகளிலும் பிரகாஷ்ராஜ் பிஸியாக இருக்கிறார். அதனால் முடியும் தருவாயில் உள்ள அறை எண் 305ல் கடவுள், சந்தோஷ் சுப்ரமண்யம் இரண்டு படங்களும் இவரது தேதி கிடைக்காமல் காத்திருக்கிறார்கள்.
அடுத்த படத்தை பற்றி சொல்வது இருக்கட்டும்.. பிரகாஷ்ராஜின் சொந்தப்படமான வெள்ளித்திரை படமும் முடிந்து விட்டது.
படத்தில் நடித்த அத்தனை பேரும் டப்பிங் பேசி முடித்து விட்டார்கள். பேச வேண்டியது பிரகாஷ்ராஜ் மட்டும்தானாம்.
அதற்கே இன்னும் பிடிகொடுக்காமல் இருக்கிறார்..என்ன சொல்ல!என்கிறார்கள்.
என்னத்த சொல்ல!?