பாலாவை வைத்து பிதாமகன் படத்தை தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ரவி.
அதன் பிறகு எடுத்த படங்கள் சரியாக போகாத்தால் படம் தயாரிப்பதை நிறுத்தி வைத்திருந்தார்.
இதற்கிடையில் ஃபஸ்டார் ஆடியோ நிறுவனத்தின் சொந்தக்காரரான கதிரேசன் படத் தயாரிப்பில் இறங்கினார். இரண்டு பேரும் நண்பர்கள் என்பதால் தனது தயாரிப்பு வேலையில் உதவியாக இருக்கும்படி ரவியிடம் கேட்க...அவரும் ஒப்புக்கொண்டு மொத்தப் படத்தையும் உடன் இருந்து முடித்து கொடுத்திருக்கிறார்.
அதற்காக அவருக்கு ஒரு சம்பளம் தருவதாக ஒப்புக்கொண்டாராம் கதிரேசன்.
படம் ரிலீஸாகி சூப்பர் ஹிட் ஆகியும் இதுவரை அவருக்கு பணம் போய் சேரவில்லை.
அதை கேட்க போன இடத்தில் இரண்டு பேரும் சண்டை போட்டு தெருவே வேடிக்கை பார்க்கிற அளவுக்கு பிரச்சினை ஆகிவிட்டதாம்.
இதில் யார் பொல்லாதவன்!