Publish Date: Tue, 18 Dec 2007 (11:14 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:36 IST)
கார்பரேட் கம்பெனிகள் படத்தயாரிப்பில் இறங்கியது போல் பிரபல வார இதழான ஆனந்த விகடனும் படத் தயாரிப்பில் இறங்கியுள்ளது.
அவர்கள் நினைத்தால் மார்க்கெட்டில் உள்ள இயக்குனர்களை வைத்து படம் தயாரிக்க முடியும்.
ஆனால் புதியவர்களுக்கு வாய்ப்புக்கொடுக்க வேண்டும் என்பதற்காக அந்த மாதிரி ஆட்களிடம் கதை கேட்கிறார்கள்.
கதை பிடித்துப் போனால்... அவர்களுக்கு 1000 அடி பிலிம் ரோல் கொடுத்து ஒரு கான்ஸெப்ட்டும் சொல்லி அதை குறும்படமாக எடுத்து தரச் சொல்கிறார்களாம். அதில் தேறினால் இயக்குனர் வாய்ப்பு.
இந்த டெஸ்டில் இரண்டுபேர் பாஸாகிவிட்டார்கள். ஒருவர் கிரீடம் படத்தை இயக்கிய விஜயின் உதவியாளர் அனந்த கிருஷணன்.
இன்னொருவர் எஸ்.ஏ.சியின் உதவியாளர் ராஜேஸ்!