இதுவரை அல்ட்டிமேட் ஸ்டார் அஜித் நடித்து வெளியான படங்களுக்கு அதிகப்பட்சம் 200 பிரிண்ட்கள் தமிழ்நாட்டுக்கு போடப்பட்டிருக்கிறது.
பில்லா படத்துக்கு இதுவரை 350 பிரிண்ட்கள் வரை போட்டிருக்கிறார்கள்.
கடைசிக்கட்ட வேலைகள் முடிவதற்கு கொஞ்சம் தாமதமானதால் மொத்த பிரிண்ட்களும் மும்பை லேப்பில் போட்டு எடுத்து வருகிறார்கள்.
இதில் ஆச்சர்யமான தகவல் என்ன தெரியுமா?!தமிழ் நாட்டில் ரஜினியின் படங்களுக்கு போட்டதை விட அதிக தியேட்டர்களில் பில்லா திரையிடப்படுகிறது.
உதாரணத்துக்கு ஒன்றே ஒன்று மட்டும்..மதுரையில் சிவாஜி 23 தியேட்டர்களில் மட்டும் போடப்பட்டன.
பில்லாவுக்கு இதுவரை 28 தியேட்டகளில் ரிலீஸ் செய்ய ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். படம் வெளியாகி ஹிட் ஆனால் இந்த எண்ணிக்க கூடும்!