எதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும் என்பது நடிகை பாவனா விசயத்தில் சரியாகத்தான் இருக்கிறது.
முதன் முதலாக அறிமுகமான சித்திரம் பேசுதடி படத்தை தவிர இவர் நடித்த தீவாவளி, கிழக்கு கடற்கரைசாலை, ஆர்யா என எதுவுமே எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.
சமீபத்தில் வெளியான ராமேஸ்வரம் படமும் பெரிய ஹிட் படம் இல்லை என்கிற நிலையில்தான் இருக்கிறது.
இதனால் கோடம்பாக்கத்து ஆட்கள் சிலர் பாவனா ராசி இல்லாத நடிகை என்று கிளப்பி விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இதனால் பாவனாவை விட அதிகம் கலங்கிப்போயிருப்பது வாழ்த்துகள் பட யூனிட்தான்.
அழகான நடிகை என்று பேர் இருந்தும் இப்படி நடந்தால் வேறு என்னதான் செய்வது!