பழைய படங்களுக்கும் பாடல்களுக்கும் மவுசு வந்தாலும் வந்தது...ஆளாளுக்கு இருக்கிற பழைய படங்கள ஏகத்துக்கும் தூசுதட்டத் தொடங்கி விட்டார்கள்.
பிரபுதேவா ஹீரோவாக அறிமுகமான காலக்கட்டத்தில் வெளிவந்த படம் நாம் இருவர் நமக்கிருவர்.
பிரபுதேவா இரட்டை வேடத்தில் நடித்த இந்தப் படம் இப்போது இந்தி, மலையாளம் என்று பெரிய விலைக்கு டப்பிங் உரிமை கேட்டு ஆளாளுக்கு மோதிக்கொண்டிருக்கிறார்கள்.
அந்தப் படம் வெளியான நேரத்தில் வசூலாகியதை விட... காலதாமதமாக சம்பாதித்து கொடுத்திருக்கிறது என்று உற்சாகமாக இருக்கிறார் அதன் தயாரிப்பாளர் எம்.ஆர்.பாலு!