புதிதாக படம் எடுக்க வருகிற இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் படத்தின் விளம்பரத்திற்காக படம் சம்பந்தப்பட்ட செய்தியை கொஞ்சம் கூட்டி குறைத்து சொல்வது வழக்கம்.
அடடா என்ன அழகு படத்தின் இயக்குனர் ஜெயமுருகன் படத்தில் நடந்ததை நடந்த மாதிரியே சொல்லி இப்போ சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறார்.
ஜெய் ஆகாஷ், கருணாஸ் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஊட்டியில் நடந்து முடிந்திருக்கிறது.
படப்பிடிப்பின் போது கருணாஸ் பாம்பின் மீது தலைவைத் படுப்பதுபோல் காட்சி.
அதற்கு நிஜ பாம்பை கொண்டு வந்து படமாக்கியிருக்கிறார்கள். பத்திரிகைகளில் அது பற்றி சொல்லப்போக..
இப்போ பிரச்சினையாகிவிட்டது.சென்ஸார் கேட்கும் கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்வதென்று இப்போதே தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
தேவையா இது!?