Publish Date: Mon, 17 Dec 2007 (12:46 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:36 IST)
அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் படம் துரை. தேனப்பன் தயாரிக்க இப்படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதியில் நடந்து வந்தது.
இதற்கிடையில் ஏ.வெங்கடேஷ் தான் இயக்கும் இன்னொரு படமான சிங்ககுட்டி படத்தின் படப்பிடிப்பை உடனடியாக நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
காரணம் ஒளிப்பதிவாளர் ராஜசேகர் இப்போதுதான் சிங்ககுட்டி படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். அவர் கால்ஷீட்டை பயன்படுத்தாவிட்டால் அப்புறம் அவர் பிஸியாகிவிடுவார்.
அதனால் வெங்கடேஷ் துரை படப்பிடிப்பை தற்காலிகமாக தள்ளிவைத்துவிட்டு சிங்ககுட்டி படத்தை இயக்கப்போகிறார்.