தலைப்பை படிக்கும்போதே ஆச்சர்யமாக இருக்கா! விசயம் இதான்...
செல்வராகவன் இயக்கத்தில் பருத்திவீரன் கார்த்திக் நடிக்கும் படம் ஆயிரத்தில் ஒருவன்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் சாலக்குடி பாரஸ்ட்டில் கிட்டத்தட்ட ஐம்பது நாள் நடந்தது. படப்பிடிப்புக்கு போன மூன்றாவது நாளே யானைகள் கூட்டம் வந்து படப்பிடிப்பு குழு போட்டு வைத்திருந்த செட்டுகளை உடைத்துப்போட்டுவிட்டு போய்விட்டது.
தினமும் எந்த நேரம் யானைகள் வருமோ என்ற பயத்துடனேயே மொத்தப்படப்பிடிப்பையும் நடத்தியிருக்கிறார்கள்.
தங்கியிருக்கும் இடத்திலிருந்து படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு போகும்போதும் வரும்போதும் சினிமாவில் பயன்படுத்தப்படும் டம்மி துப்பாக்கியை வைத்து சுட்டு ஒலி எழுப்பியபடியேதான் போய் வந்திருக்கிறார்கள்.
டம்மி துப்பாக்கின்னாலும் உயிரக் காப்பாத்துதே