இயக்குனர் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் ஜே.ஜே கம்பைன்ஸ் ஞானவேலு ஜெயப்பிரகாஷ் இருவரும் தயாரிக்கும் படம் காக்கி.
சரத்குமார் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படம் தொடங்கி இரண்டு வருடமாகிவிட்டது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டும்தான் பாக்கி என்ற நிலையில் சரத்குமார் மொட்டை போட முடியாது என்று சொன்னதாலயே அந்தப்படம் அப்படியே நின்றுபோய்விட்டது.
மறுபடியும் சரத்திடம் பேசி சம்மதிக்க வைத்துவிட்டார்கள். நடிகர் சங்கம் நடத்தும் சிங்கப்பூர், மலேசியா ஸ்டார் நைட் புரொக்கிராம் முடிந்த கையோடு காக்கியை ஆரம்பிக்கச் சொல்லியிருக்கிறாராம்.