இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த பிறகு அவரோடு கைகோத்து எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக் கொண்டு செய்தவர் ஷங்கரின் சகலை பாலாஜி.
காதல் படம் ரிலீஸான நேரத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து போய்விட்டார் பாலாஜி.
அதன் பிறகு இயக்குனர் சாமியை வைத்து உயிர் படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார்.
அந்தப்படம் பெரிய அளவில் ஓடியும் அடுத்த படம் எடுக்கவில்லை. நடுவில் இரண்டு தரப்பும் சந்தித்து சமாதானம் ஆகிவிட்டார்கள்.
இப்போது கல்லூரி படத்தின் வெளியீடு முழுவதையும் பார்த்துக்கொள்வது பாலாஜிதான்.